News April 25, 2024
மார்ச் மாதம்: கிரெடிட் கார்டுகள் மூலம் ₹1.64 லட்சம் கோடி செலவு

கடந்த மார்ச்சில் கடன் அட்டைகள் (கிரெடிட் கார்டு) மூலம் ₹1.64 லட்சம் கோடியை மக்கள் செலவிட்டுள்ளனர். 2023 மார்ச்சில் கடன் அட்டைகள் மூலம் மக்கள், ₹1.37 லட்சம் கோடியை செலவிட்டிருந்தனர். அதை விஞ்சும் வகையில், இந்த ஆண்டு மார்ச்சில் ₹1.64 லட்சம் கோடிக்கு செலவிட்டுள்ளனர். இதில் ஆன்லைனில் மட்டும் ₹1.04 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இது 2023 மார்ச்சுடன் ஒப்பிடுகையில் 20% அதிகமாகும்.
Similar News
News March 9, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி நாளை(10.3.2026) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் நாளை இயங்காது. அதேநேரம், அரசு பொதுத்தேர்வுகள் தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 14-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகும்.
News March 9, 2026
VIRAL: 11 கிராம் தங்கம் ₹113 Only!

ஷாக்காக இருக்கா? ஆனால், உண்மைதான். 1959-ம் ஆண்டு 11.66 கிராம் தங்கத்தின் விலை ₹113 தான். அப்படியென்றால், 1 கிராம் தங்கம் வெறும் ₹10-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 67 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த ரசீதை பார்த்த நெட்டிசன்கள் ஷாக் ஆகியுள்ளனர். இன்றைக்கு ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் ₹₹1,19,600 தேவைப்படுகிறது. இப்போது பார்க்கும் போது அதிர்ச்சியாக இருந்தாலும், அன்றைய தேதிக்கு ₹113 அவ்வளோ பெரிய காசு!
News March 9, 2026
₹2,000 மகளிர் உரிமைத் தொகை.. ஸ்டாலின் கொடுத்த HAPPY NEWS

மகளிர் உரிமைத்தொகை ₹1000-ல் இருந்து ₹2000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் ஏற்கெனவே வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்நிலையில், திமுகவின் மகளிர் உரிமைத்தொகையை யாராலும் நிறுத்த முடியாது என்றும், நிறுத்த நினைத்தால் அவர்கள் வீட்டு பெண்களே ஓட்டுப்போட மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார். இதனால் தான் அதிமுக தங்கள் திட்டத்தை டாப் அப் செய்து தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.


