News November 23, 2025
போதை – பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும்: PM மோடி

போதைப் பொருள் மற்றும் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டில் PM மோடி வலியுறுத்தியுள்ளார். போதைக் கடத்தல் தடுப்பை சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற அவர், ஃபென்டனில் போன்ற போதைப் பொருள்கள் பரவலையும், போதை-பயங்கரவாத கூட்டையும் ஒழிக்க வேண்டுமென்றார். மேலும், பயங்கரவாதத்தை வளர்க்கும் நிதி மூலங்களை தடுக்க முயற்சிக்கவும் அழைப்பு விடுத்தார்.
Similar News
News February 16, 2026
2 அமைச்சர் சீட்.. Open-ஆக கேட்ட மாணிக்கம் தாகூர்

ஸ்டாலின் வென்று மீண்டும் CM ஆக வேண்டுமென்றுதான் நினைக்கிறோம் என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். அதற்காக காங்கிரஸ் பாடுபடும் என கூறிய அவர், கூட்டணி கட்சியில் இருந்து 2 பேர் அமைச்சர்களாக இருந்தால் என்ன தவறு என கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கெனவே காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க திமுக மறுத்துவரும் நிலையில், மாணிக்கம் தாகூரின் இந்த கோரிக்கையால் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News February 16, 2026
தங்கம் விலை ₹90,000-க்கு கீழ் குறைகிறது.. REASON

USA-ரஷ்யாவுக்கு இடையிலான வர்த்தகம் டாலரில் நடந்தால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அப்படி நடந்தால், 10 கிராம் தங்கத்தின் விலை 2027-ம் ஆண்டின் இறுதிக்குள் ₹90,000 – ₹1 லட்சத்திற்கு இடையில் நிலைபெறக்கூடுமாம். ஆனால், தங்கம் விலை பல ஏற்ற இறக்கங்களை கண்ட பிறகே இந்த மாற்றம் ஏற்படும் என்கின்றனர். தற்போது, 10 கிராம் தங்கத்தின் விலை ₹1.45 லட்சமாக உள்ளது.
News February 16, 2026
FLASH: டெல்லி விரையும் செல்வப்பெருந்தகை

கூட்டணி விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க டெல்லியிலிருந்து வந்த அழைப்பின்பேரில் செல்வப்பெருந்தகை டெல்லி விரைந்துள்ளார். மேலும், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக குழு அமைத்த பிறகு, தலைமையின் உத்தரவை மீறி பொதுவெளியில் கூட்டணி தொடர்பாக கருத்து கூறி வரும் <<19148133>>மாணிக்கம் தாகூருக்கு<<>> எதிராக சில MLA-க்கள் கடிதம் கொடுத்துள்ளனர். அந்த கடிதங்கள் தொடர்பாகவும் தலைமையிடம் அவர் எடுத்துரைக்க உள்ளதாக கூறப்படுகிறது.


