News November 23, 2025
பிரேசில் முன்னாள் அதிபர் கைது

பிரேசிலின் முன்னாள் அதிபர் போல்சனாரோ, அந்நாட்டு போலீஸால் இன்று கைது செய்யப்பட்டார். முன்னதாக, 2022 தேர்தல் தோல்வியை அடுத்து ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட வழக்கில் அவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதற்காக சிறை செல்ல சில நாள்களே இருக்கும் நிலையில், போலீஸ் அவரை கைது செய்துள்ளனர். இதனால் அந்நாட்டில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தீவிரமடையும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News February 1, 2026
அரசு மாதிரிப் பள்ளிகளில் நாளை முதல் அட்மிஷன்

தமிழக அரசு மாதிரிப் பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்கவுள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பட்டியல் இம்மாதம் 2-வது வாரம் வெளியாகும். அதேபோல், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை மே மாதத்தில் தொடங்கவுள்ளது. நவீன உள்கட்டமைப்புகளுடன் செயல்படும் அரசு மாதிரிப் பள்ளிகளில் நீட், JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
News February 1, 2026
உப்புக்கு Expiry Date இருக்கா?

உப்பில்லாமல் உணவின் சுவை கெட்டுப்போகலாம், ஆனால் உப்பு எப்போதும் கெட்டுப்போகாது. சுத்தமான உப்பில் பாக்டீரியா மற்றும் கிருமிகளால் வளரவே முடியாது. அதில் இருக்கும் அயோடின் காலப்போக்கில் கரைந்துபோய், அதன் சத்து குறையுமே தவிர, மற்றப்படி உப்பு கெட்டுப்போகாது. எவ்வளவு நாள்களில் அந்த சத்து குறையும் என்பதை சுட்டிக்காட்டவே உப்பு பாக்கெட்டுகளில் Expiry Date கொடுக்கப்படுகிறது. பலருக்கும் தெரியாது SHARE THIS.
News February 1, 2026
பெரும் சரிவுடன் முடிவடைந்த பங்குச் சந்தை

பட்ஜெட்டால் அதிர்ந்த பங்குச் சந்தைகள் பெரும் சரிவுடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் 1546 புள்ளிகள் சரிந்து 80,722ஆகவும், நிஃப்டி 495 புள்ளிகள் சரிந்து 24,825ஆகவும் நிறைவடைந்தன. சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள முதல் 30 பங்குகளில், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், சன் பார்மா, டைட்டன் தவிர மற்ற அனைத்தும் சரிவுடன் முடிந்தன. F&O தொடர்பான பத்திர பரிவர்த்தனை வரி உயர்த்தப்பட்டது, சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.


