News April 25, 2024

நாமக்கல்: வெள்ளி கவசத்தில் அங்காள பரமேஸ்வரி

image

எருமபட்டி ஒன்றியம் சர்க்கார் பழைய பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மூலவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பின்னர் மகா தீபாரதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

Similar News

News October 28, 2025

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

image

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் இன்று அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.5.35 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முட்டையின் விலை ரூ.5.30 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை தேவை அதிகரித்ததன் காரணமாகவே விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.

News October 28, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.27 நாமக்கல்-( தங்கராஜ் – 9498110895) ,வேலூர் -( சுகுமாரன் – 8754002021 ), ராசிபுரம் -( கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் -(செல்வராசு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News October 27, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (27.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட அதிகாரியை அல்லது 100-ஐ டயல் செய்து அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!