News November 22, 2025
திருப்பத்தூர்: +2 மாணவர்கள் கவனத்திற்கு!

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன் அரையாண்டு மாதிரி தேர்வு நடத்த முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி தெரிவித்துள்ளார். இதற்கான கால அட்டவணை இன்று நவம் 22 வெளியிடப்பட்டது. அதன்படி நவ.28- ஆங்கிலம், டிச.1- கணிதம் டிச.2- உயிரியல், டிச.3- இயற்பியல், டிச.4-கணினி அறிவியல், டிச.5- வேதியியல் டிச.8 – தமிழ்.
Similar News
News November 23, 2025
திருப்பத்தூர் மக்களே 4 வகையான கடன்களை பெறலாம்!

சிறுபான்மையினர்களுக்கு, குறைந்த வட்டியில் தனிநபர் கடன் (ரூ.30 லட்சம்), சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் (ரூ.1 லட்சம்), கைவினை கலைஞர்களுக்கான கடன் (ரூ.10 லட்சம்), கல்வி கடன் வழங்கப்பட உள்ளன. ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.3 லட்சம், நகர்புறங்களில் ரூ.8 லட்சம் இருக்க வேண்டும். சென்னை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News November 23, 2025
திருப்பத்தூர்: 6 பேர் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து!

ஜோலார்பேட்டை அருகே அச்சமங்கலம் சேர்ந்த கவிதா என்பவர் நேற்று (நவ.22) ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் இருந்து திருப்பத்தூர் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது லாரி ஷெட் அருகே எதிரே வந்த ஸ்கூட்டி மீது மோதியதில் ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது இதனால் ஆட்டோவில் பயணம் செய்த கவிதா, காஞ்சனா, சென்றாயன், பிரகாஷ் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 23, 2025
திருப்பத்தூர் இரவு ரோந்து விவரங்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கான காவல் அதிகாரிகளின் பணிப்பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட நைட் ரவுண்ட்ஸ் கண்காணிப்பு அதிகாரிகளுடன், திருப்பத்தூர், வேணுாப்பாள்சேரி மற்றும் ஆம்பூர் உப பிரிவுகளுக்கான காவல் நிலையத்தினரின் பெயர், பொறுப்பு மற்றும் தொடர்பு எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நிலையங்களும் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபட்டனர்.


