News November 22, 2025
1 கிலோ அரிசியின் விலை ₹12,000 ரூபாயா!

Kinmemai என்பது ஜப்பானிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வகை பிரீமியம் அரிசி ஆகும். வழக்கமான அரிசியை விட இதில் அதிக ஊட்டச்சத்து, சுவை இருக்கிறதாம். இதை சமைப்பதற்கு முன் கழுவ வேண்டியதில்லை. இதனால் நேரமும், தண்ணீரும் மிச்சமாகிறது. 1 கிலோ அரிசியின் விலை ₹12,000-க்கு விற்கப்படுவதால் இதை பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். உலகின் காஸ்ட்லியான அரிசி என்ற கின்னஸ் சாதனையையும் இது படைத்துள்ளது.
Similar News
News February 7, 2026
கூட்டணி பற்றிய செய்திகளில் உண்மையில்லை: தவெக

தவெக காங்கிரஸுடன் ரகசியமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தொடர்ந்து செய்தி வருகிறது. இந்நிலையில், கூட்டணி விவகாரத்தில் தவெகவை பிற கட்சிகளுடன் தொடர்புபடுத்தி வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை என தவெக மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார். தங்களின் கூட்டணிப் பேரங்களை உயர்த்திக் கொள்வதற்காக பல கட்சிகள் உண்மையற்ற தகவல்களை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
News February 7, 2026
ஷேவிங் செய்யும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க

➤ரேசரை சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவது ➤ஒரே ரேசரை மாதக்கணக்கில் பயன்படுத்துவது ➤மேல் நோக்கி ஷேவ் செய்வது ➤சோப்பை போட்டு ஷேவ் செய்வது ➤அதிக அழுத்தம் கொடுத்து ஷேவ் செய்வது ➤ஷேவ் செய்த பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்தாமல் இருப்பது. இதுபோன்ற தவறுகளை செய்தால் காயம், எரிச்சல், அரிப்பு, வறட்சியில் இருந்து தொடங்கி, நோய்த்தோற்று ஏற்படலாம். இதில் நீங்க எந்த தப்ப பண்றீங்க?
News February 7, 2026
தேர்தலில் TN vs NDA இடையே தான் போட்டி: ஸ்டாலின்

துரோகிகளும் எதிரிகளும் சேர்ந்து ஒட்டுமொத்த TN-ன் சுயமரியாதையை அடகுவைக்க பார்க்கிறார்கள் என விருதுநகரில் ஸ்டாலின் பேசியுள்ளார். வரும் தேர்தலில் TN-க்கும், NDA-க்கும் இடையே தான் போட்டி எனக் கூறிய அவர், இளைஞரணியின் ஆதரவு தொடர்ந்து இருந்தால் திமுகவை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது எனத் தெரிவித்தார்.


