News November 22, 2025
ஆபரேஷன் சிந்தூரால் சீனாவுக்கு லாபம்: USA

இந்தியா – பாக்., போரை, சீனா சோதனை களமாக பயன்படுத்தி கொண்டதாக அமெரிக்க அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தங்களது நவீன ஆயுதங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை உலகிற்கு காட்டவும், பிறநாடுகளுக்கு ஆயுதங்களை விற்கவும் போரை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டதாக கூறியுள்ளது. சீனாவின் HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பு, PL-15 ஏவுகணைகள், J-10 போர் விமானங்களை பாக்., போரில் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News February 4, 2026
இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த டாப் 10 வீடுகள்!

இந்தியாவின் பல முன்னணி தொழிலதிபர்கள் மிகப்பெரும் செலவில் அழகான, பிரமாண்டமான வீடுகளை கட்டியுள்ளனர். அவர்களில் யாரெல்லாம் மிகவும் விலையுயர்ந்த வீடுகளை வைத்துள்ளனர்? அந்த வீடுகள் எங்கு அமைந்துள்ளன? அவற்றின் மதிப்பு எவ்வளவு? இந்த தகவல்களை எல்லாம் மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொரு படமாக ஸ்வைப் செய்து பார்த்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். SHARE
News February 4, 2026
இந்திய சந்தையை US-க்கு வாடகைக்கு விட்டதா? சு.வெ.,

இந்திய-US வர்த்தக ஒப்பந்தத்தில் PM மோடி சரணாகதி அடைந்தார் என்பதை US செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளதாக MP சு.வெங்கடேசன் சாடியுள்ளார். ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாக பியூஷ் கோயல் கூறும் நிலையில், அதற்கு மாறாக இந்தியா ஒப்புக்கொண்ட முடிவுகளை US அதிகாரி பட்டியலிடுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்தியாவின் நிர்வாகத்தை US-க்கு உள் வாடகைக்கு விட்டதா BJP எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
News February 4, 2026
U19 WC: இந்திய அணி பவுலிங்

U19 WC-ல் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி நிதானமாக விளையாடி வரும் ஆப்கன் அணி 8 ஓவர்களில் 34 ரன்களை எடுத்துள்ளது. இதுவரை லீக் சுற்றில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத இந்தியா, இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


