News November 22, 2025
திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் மூலம் (நவம்பர் 22), 2025 அன்று பொதுமக்களுக்கு சைபர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதில் வங்கி கணக்கு விவரங்கள், OTP, கார்டு தகவல்களை தெரியாத நபர்களுடன் பகிர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. அவசர உதவிக்கு, சைபர் குற்ற எண் ‘1930’ அழைக்கலாம்.
Similar News
News November 24, 2025
திண்டுக்கல் அருகே நள்ளிரவில் பரபரப்பு!

திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தாடிக்கொம்பு அகரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு, கேரளாவில் இருந்து பெங்களூருக்கு சென்ற தனியார் ஆம்னி பேருந்து நள்ளிரவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை உடைத்து சேற்றுப்பகுதியில் சென்று நின்றது. அதிர்ஷ்டவசமாக எதிர்புறமாக வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது கிரேன் மூலம் பேருந்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
News November 24, 2025
திண்டுக்கல்: WhatsApp-ல் சிலிண்டர் புக்கிங் எப்படி?

திண்டுக்கல் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம். SHARE பண்ணுங்க!
News November 24, 2025
BREAKING: விடுமுறை குறித்து திண்டுக்கல் கலெக்டர் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று (நவ.24) கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், திண்டுக்கல்லில் அதிக மழை இல்லாத காரணத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.


