News November 22, 2025
ஈரோட்டில் இரு மடங்கு விலை உயர்வு

சத்தி பூ மார்க்கெட்டில் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ வரத்து குறைந்ததால் நேற்று கி.ரூ 1740 க்கு விற்றது. இன்று இரு மடங்கு விலை உயர்ந்து கி.ரூ 3300/- விற்பனையானது. இதே போல் மற்ற பூக்களும் விலை உயர்ந்தது . அதன் விவரம் முல்லைப்பூ – ரூ 840– 1360, காக்கடா – ரூ 925 – 1450 க்கும், ஜாதி முல்லை – ரூ 650 – 750க்கும், கனகாம்பரம் – ரூ. 900 க்கும், சம்பங்கி – ரூ – 180 க்கும் விற்பனையானது.
Similar News
News November 23, 2025
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதன்படி, ஈரோடு- 2.2 மி.மீ, கொடுமுடி – 13.6 மி.மீ, பெருந்துறை – 3 மி.மீ, சென்னிமலை – 3 மி.மீ, பவானி – 2.2 மி.மீ, கவுந்தப்பாடி – 11 மி.மீ, அம்மாபேட்டை – 10.4 மி.மீ, வரட்டுப்பள்ளம் அணை-2 மி.மீ, கோபி-6.2 மி.மீ, எலந்தகுட்டைமேடு – 16.4 மி.மீ, கொடிவேரி அணை-2 மி.மீ, குண்டேரிப்பள்ளம் அணை – 1.2 மி.மீ, சத்தியமங்கலம்- 7 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
News November 23, 2025
ஈரோடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

ஈரோடு மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News November 23, 2025
ஈரோடு: PHONE தொலைந்து விட்டதா.. SUPER தகவல்

ஈரோடு மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே<


