News November 22, 2025
இந்துக்கள் இல்லையென்றால் உலகம் இல்லை: RSS தலைவர்

இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும் என RSS தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். உலகில் தோன்றிய கிரீஸ், எகிப்து, ரோமன் என எல்லா நாகரீகங்களும் அழிந்துவிட்டன எனவும், ஆனால் பாரதம் என்பது அழிவே இல்லாத நாகரீகம் என அவர் கூறியுள்ளார். மேலும், எவ்வளவு கடினமான சூழல் வந்தாலும் இந்தியா ஒற்றுமையாக, உறுதியாக நின்றிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 25, 2025
ராமர் கோயிலில் பிரம்மாண்ட கொடியேற்று விழா

ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இன்று கொடியேற்றும் விழா நடைபெற உள்ளது. PM மோடி இவ்விழாவில் பங்கேற்று, கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் உச்சியில் காவிக் கொடி ஏற்றி வைக்கிறார். இதற்காக ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக் கொடி உருவாக்கப்பட்டுள்ளது.
News November 25, 2025
SIR மூலம் நீக்கப்பட்டவர்கள் வெளிநாட்டவர்களா? திருமா

SIR மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களில் எத்தனை பேர் வெளிநாட்டவர்கள் என்பதை நிரூபிக்க முடியுமா என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரில் நீக்கப்பட்டுள்ள 43 லட்சம் பேரும், ஏழை, தலித்துக்கள், இஸ்லாமியர்கள் என இந்நாட்டின் குடிமக்களே என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஏழைகளின் ஆயுதமான வாக்குரிமையை பறிக்கவே மத்திய பாஜக அரசு திட்டமிட்டு SIR-ஐ செயல்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
News November 25, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று கிடுகிடுவென உயர்ந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,600 உயர்ந்து ₹93,760-க்கும், கிராமுக்கு ₹200 உயர்ந்து ₹11,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


