News November 22, 2025
இயற்கை விவசாயிகள் நடத்தும் மரபுச் சந்தை!

கிருஷ்ணகிரி, கட்டையான பல நூலக மைதானத்தில் நாளை (நவ.23) இயற்கை விவசாயிகள் நடத்தும் 194வது மரபுச் சந்தை நடைபெற உள்ளது. இதில் பாரம்பரிய அரிசி வகைகள், தானியங்கள், பசு நெய், தேன், அவல், ஊறுகாய், சிறு தானியங்களால் செய்த கேக், மருந்தில்லாமல் விளையும் காய்கறிகள் அனைத்தும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
Similar News
News February 7, 2026
கிருஷ்ணகிரி பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி! APPLY NOW

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமுத்தூர் ஊராட்சி கே.ஆர்.பி அணை வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி அலுவலகத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் பயிற்சிபெற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 18- 45 வயது வரை உள்ள பெண்கள் பிப்.09க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9080676557 என்ற எண்ணில் தொடர் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் IT
News February 7, 2026
கிருஷ்ணகிரி: காட்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி

தேன்கனிகோட்டை அடுத்த ஜர்காலட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ் 42, விவசாயி, இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இந்நிலையில் நேற்று பிப்-06 கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 7, 2026
கிருஷ்ணகிரி: உயிருக்கு ஆபத்தான நிலையில் இரட்டை குழந்தைகள்

பர்கூர் அருகே, கடந்த பிப்.5 தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்த 2 வயது இரட்டைக் குழந்தைகள், அங்கிருந்த எலி மருந்தை பற்பசை என நினைத்துத் தவறுதலாக உட்கொண்டனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர்கள், தற்போது பெங்களூரு இந்திரா காந்தி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


