News November 22, 2025
USA-ன் திட்டம் அமைதிக்கான அஸ்திவாரம்: புடின்

அமெரிக்காவின் <<18355051>>போர் நிறுத்த திட்டம்<<>>, உக்ரைனில் அமைதிக்கான அஸ்திவாரமாக இருக்கும் என புடின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்கா தங்களுடன் ஆலோசிக்கவில்லை என்றாலும், 28 நிபந்தனைகள் அடங்கிய ஆவணத்தை அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த அமைதி திட்டத்தை உக்ரைன், ஐரோப்பிய நாடுகள் ஏற்க மறுத்தால், ரஷ்ய படைகள் முன்னேறுவதை யாரும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 8, 2026
செல்போனில் ஆபாச வீடியோ தேடியவருக்கு ஷாக்!

சீனாவில் ஒருவர் இணையத்தில் ஆபாச வீடியோ தேடும்போது அவர் தனது காதலியுடன் இருந்த அந்தரங்க வீடியோ Live Stream ஆனது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. விசாரணையில், ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது ஸ்விட்ச் போர்டில் மறைத்து வைக்கப்பட்ட ஸ்பை கேமரா மூலம் வீடியோ எடுக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. போலீஸில் புகார் அளித்த பிறகு பெரிய மாஃபியா கும்பல் சிக்கியுள்ளது. ஹோட்டலில் தங்கும் போது தம்பதியினர் உஷார்.
News February 8, 2026
ரயில்வேக்கு PM மோடி அட்வைஸ் கொடுக்கனும்: CM

தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு முழு நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என PM மோடியை CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எழுதிய கடிதத்தில், நில எடுப்பு, இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்திட ஏதுவாக தாமதமின்றி நிதியை விடுவிக்க CM கோரியுள்ளார். மேலும் தமிழகத்திற்கு கூடுதலாக புதிய திட்டங்களை வழங்கிட இந்திய ரயில்வேக்கு அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News February 8, 2026
மனதை லேசாக்கும் ஃபீல் குட் படங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

மனசு பாரமா இருக்கும் போது, கொஞ்சம் லேசாக்க ஃபீல் குட் படங்களை பார்த்து ரசிக்கலாம். அப்படி OTT-ல் பார்க்கக்கூடிய காலம் கடந்தும் பேசப்படும் சில ஃபீல் குட் படங்களை பட்டியலிட்டுள்ளோம். மேலே உள்ள போட்டோவை இடது பக்கம் Swipe செய்து அந்த படங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த லிஸ்ட்டில் இன்னும் வேறு எந்த படங்களை சேர்க்கலாம்.. கமெண்ட் பண்ணுங்க.


