News November 22, 2025
சென்னையில் நாளை மின்சார ரயில்கள் ரத்து!

சென்னை, நாளை (நவ.23) திருநின்றவூர் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் காலை 7-மாலை 3.40 வரையில், சென்னை கடற்கரையில் இருந்து காலை 5.40, 6.10, 9.55, மதியம் 1.5 ஆகிய நேரங்களில் திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலும், கடற்கரையில் இருந்து 2.25க்கு திருத்தணி செல்லும் மின்சார ரயிலும், சென்டிரலில் இருந்து காலை 6.50-2.40 வரை திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.
Similar News
News November 23, 2025
ரு.2,036 கோடியில் 28 புதிய ரயில்கள் வாங்க டெண்டர்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), முதற்கட்ட வழித்தட திட்டத்திற்காக தோராயமாக ரூ.2,036 கோடி மதிப்பில் 28 புதிய ரயில்கள் வாங்க டெண்டர் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலும் 6 பெட்டிகளைக் கொண்டிருக்கும். இந்தப் புதிய ரயில்கள் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். இது சென்னையின் விரிவடையும் மெட்ரோ சேவைக்கு உறுதுணையாக இருக்கும்.
News November 23, 2025
சென்னை மக்களே மாடி தோட்டம் அமைக்க ஆசையா?

சென்னை மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <
News November 23, 2025
சென்னையில் 59.70 டன் பழைய பொருட்கள் அகற்றம்

ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் தரும் தகவலின் அடிப்படையில் அவர்களின் வீடுகளில் இருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், உடைகள் உள்ளிட்டவை சேகரிக்கபடுகின்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று 72 நபர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 59.70 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டது. அவை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் விஞ்ஞான முறையில் எரியூட்டப்பட்டது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


