News November 22, 2025
மாவட்ட அளவிலான பேச்சு போட்டி – கலெக்டர் தகவல்

வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலை பள்ளியில் வரும் டிசம்பர் 2,3 தேதிகளில் அனைத்து பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடம் ஒப்பம் பெற்று போட்டி நடைபெறும் நாளன்று நேரில் அளித்து பங்கேற்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News February 11, 2026
வேலூர் மக்களே கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

வேலூர் மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி:<
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News February 11, 2026
வேலூர்: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

வேலூர் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். வேலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News February 11, 2026
வேலூரில் மகளிர்களுக்கான ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்

காட்பாடி பகுதியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இராணுவ வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் மகளிர்களுக்கான ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் இன்று (பிப்.11) தொடங்கியது. இதை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் ராணுவ அதிகாரி R.K.அவஸ்தி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள், அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


