News November 22, 2025

விஜய் நிகழ்ச்சியில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதி

image

விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என்று புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிறு குறு விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். குறிப்பாக, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ள 2000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 8, 2026

இந்த பழக்கங்கள் இருக்கா? உடனே நிறுத்துங்க!

image

*சாப்பிடும்போது இடையில் அதிக அளவு தண்ணீர் குடிப்பது செரிமானத்தை குறைக்கும் *போனை தலையணைக்கு அடியில் வைப்பது தூக்கத்தை குலைக்கும் *நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது ரத்தம் உறையும் அபாயத்தை அதிகரிக்கும் *மிகவும் சூடாக உணவை சாப்பிடுவது உணவுக்குழாய் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் *Buds-ஐ காதில் போட்டு நோண்டுவது செவித்திறனை பாதிக்கும். சின்ன விஷயங்கள் என புறக்கணிக்க வேண்டாம். கவனமா இருங்க. SHARE IT.

News February 8, 2026

திமுக கூட்டணியில் தேமுதிகவா.. அமைச்சர் பதில்

image

திமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க, தான் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். முன்னதாக, தேமுதிகவை திமுக கூட்டணியில் இணைக்கும் பணியில் எ.வ.வேலு தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகின. அதனை மறுத்துள்ள அமைச்சர், தலைமை தான் முடிவெடுக்கும் எனத் தெரிவித்துள்ளார். இதனால், தேமுதிக எந்தக் கூட்டணி பக்கம் சாயப்போகிறது என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

News February 8, 2026

அதிமுக ஒரு கட்சியே இல்லை: செங்கோட்டையன்

image

திமுகவும் அதிமுகவும் இணைந்தால் கூட தவெகவை வெல்ல முடியாது என்று செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். NDA கூட்டணியில் உள்ள 10 கட்சிகளில் ஒன்றுதான் அதிமுக என்ற அவர், தற்போது உள்ள அதிமுக ஒரு கட்சியே அல்ல என்று கடுமையாக தாக்கி பேசினார். மேலும், 2026 தேர்தலில் திமுக – தவெக இடையேதான் போட்டி என்றும் அவர் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார். நீங்க என்ன நினைக்குறீங்க?

error: Content is protected !!