News November 22, 2025
வேலூர்: 13 சவரன் நகையை திருடிய வட மாநில பெண் கைது

காட்பாடி சேர்ந்தவர் பூவேந்தன் (66). இவர் கடந்த (செப் 26)ம் பெங்களூர் செல்வதற்காக மனைவியுடன் காட்பாடி ரயில்வே நிலையத்தில் பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் ரயிலில் ஏறும்போது பையில் வைத்திருந்த 13 சவரன் நகை திருடு போனது. இது குறித்து காட்பாடி ரயில்வே போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் ரயில்வே போலீசார் சிசிவி காட்சிகள் மூலமாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த துர்கா (45) என்பவரை நேற்று (நவ.21) கைது செய்தனர்.
Similar News
News February 13, 2026
வேலூரில் தூக்கில் தொங்கிய வாலிபர்!

கன்னிகாபுரத்தை சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் ராம் பிரகாஷ் (25). இவர் 2022-ல் ஜெயலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இரு தினங்களுக்கு முன் இவர் போதையில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். பின் பிரகாஷுக்கு அவரது நண்பர் போன் செய்தும் எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது பிரகாஷ் தூக்கில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 13, 2026
வேலூரில் துடிதுடித்து பலி!

கீழ்வடுகன்குட்டையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சதீஷ்குமார் (35). இவர் நேற்று மாலை தனது மாமனார் கோபியுடன் (62) பைக்கில் லத்தேரிக்கு சென்றனர். அப்போது பைக் நிலை தடுமாறி புளியமரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சதீஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 13, 2026
ஓடும் ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பிரசவம்

அணைக்கட்டு அடுத்த பீஞ்சமந்தை மலை பகுதி முத்தனூர் கிராமத்தை சேந்தவர் அப்பாவு, கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியா, நிறைமாத கர்ப்பிணி. பிரசவ வலியில் நேற்று துடித்த பிரியாவை வேலூர் பெண்ட்லென்ட் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு வந்தனர். அப்போது ஓடும் ஆம்புலன்சிலேயே பிரியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாயும், சேயும் வேலூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.


