News November 22, 2025
திருப்பூர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

திருப்பூர் மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 22, 2025
திருப்பூரில் இப்படி ஒரு அற்புத கோயிலா!

திருப்பூர் தாராபுரத்தில் மிகவும் பழமையாம காடு ஹனுமந்தராய சுவாமி கோயில் உள்ளது. 1810 ஆண்டில் கோவை ஆட்சியராக இருந்த டீன் துரை, புற்றுநோய் குணமடைய, ஹனுமந்தராய சுவாமியை வேண்டியுள்ளார். அவ்வாறே நோயும் குணமடைந்ததாம். அதற்கு நன்றிக்கடனாக கோயில் கர்பகிரகத்தை, டீன்துரை பெரிதாக கட்டித்தந்தாராம். இத்தகையை சக்திவாயந்த ஹனுமந்தராய சுவாமியை, ஒரு முறை சென்று வணங்கினால், சர்வ தோஷம், நோய்களும் நிவர்த்தியடையுமாம்.
News November 22, 2025
திருப்பூர் மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். <
News November 22, 2025
திருப்பூர்: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க!


