News November 22, 2025

தோனிக்கு அடுத்து ரிஷப் பண்ட்; எதுலன்னு பாருங்க..

image

தோனிக்கு அடுத்தபடியாக இந்திய டெஸ்ட் அணியை கேப்டனாக வழிநடத்தும் 2-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரிஷப் பண்ட். காயம் காரணமாக சுப்மன் கில் விலகியதால் தெ.ஆ., அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு ரிஷப் பண்டுக்கு கிடைத்துள்ளது. 2008 முதல் 2014 வரை சுமார் 60 டெஸ்ட் போட்டிகளை தோனி வழிநடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 24, 2025

UAN-ல் இருந்து தவறான ஐடியை நீக்க இதை செய்யுங்கள்

image

*Unified Member போர்ட்டலுக்குள் சென்று, உங்கள் UAN விவரங்களை உள்ளிடுங்கள்.
*Views ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
*அதில் service history-ஐ ஓபன் செய்து, அதில் தவறான member ID-ஐ கிளிக் செய்யுங்கள்.
*பின்னர் அதனை delink கொடுங்கள்.
*அதற்கான காரணத்தை உள்ளிட்டால், மொபைல் நம்பருக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு நீக்கிவிடலாம்.
*உங்கள் நிறுவனம் தவறான ECR-ஐ பதிவுசெய்திருந்தால், error என மெசேஜ் வரும்.

News November 24, 2025

MGR-க்கு ஜெயலலிதா துரோகம் செய்தார்: அமைச்சர் நாசர்

image

வாழையடி வாழையாக வரும் துரோகத்தின் உச்சக்கட்டமே அதிமுக என்று அமைச்சர் நாசர் விமர்சித்துள்ளார். கருணாநிதிக்கு துரோகம் செய்தவர் MGR என்ற அவர், MGR-க்கு துரோகம் செய்தவர் ஜெயலலிதா என கூறினார். ஜெ.,க்கு சசிகலாவும், சசிகலாவுக்கு EPS-ம் துரோகம் செய்தனர் என்றும் அவர் தெரிவித்தார். தன்னை முன்னிலைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் அதிமுகவினர், அவர்களது கட்சியை வளர்த்தெடுத்தவர்களை விட்டுவிடுகின்றனர் என்றார்.

News November 24, 2025

BREAKING: 5 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

image

கனமழை எச்சரிக்கையால் 5-வது மாவட்டமாக திருவாரூருக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்காசி, நெல்லை ஆகிய 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!