News November 22, 2025
127 கிலோ தங்கத்தை கடத்திய தமிழ் பட நடிகை!

தமிழில் விக்ரம் பிரபுவின் ‘வாகா’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரன்யா ராவ். இவர், கடந்த மார்ச் மாதம் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் DRI, ரன்யா ராவ் உள்பட 4 பேர் மீது 2,200 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதில், அவர் மொத்தமாக 127 கிலோ தங்கத்தை கடத்திய அதிர்ச்சி தகவலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Similar News
News February 16, 2026
₹3 லட்சம் நிதியுதவி: CM ஸ்டாலின் அறிவித்தார்

தூத்துக்குடி, விளாத்திகுளம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் <<19152288>>உயிரிழந்த 5 பேரின்<<>> குடும்பத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த குருசாமி(40), முத்துலட்சுமி(48), சுமித்ரன்(3) உள்ளிட்ட 5 பேரின் குடும்பத்திற்கும் தலா ₹3 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஒரே பைக்கில் சென்ற 5 பேர் மீது சுற்றுலா வேன் மோதியது கவனிக்கத்தக்கது.
News February 16, 2026
இதெல்லாம் தெரியாம ரயிலில் பயணிக்காதீங்க!

*ரயில் 3 மணி நேரத்திற்கு மேல் தாமதமானால், சரியான புறப்படும் நேரத்திற்கு முன் டிக்கெட்டை கேன்சல் செய்தால், முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும் *கன்ஃபார்ம் ஆன டிக்கெட்டை குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அவசர நேரத்தில், ரயில் கிளம்புவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் மாற்றிக் கொடுக்கலாம் *ஸ்லீப்பர் கோச்சில் டிக்கெட் முன்பதிவு செய்து, 3AC-ல் சீட் இருந்தால் எக்ஸ்ட்ரா சார்ஜ் இல்லாமல் மாற்றிக் கொடுக்கப்படும்.
News February 16, 2026
ராமதாஸ் அத்வாலேவால் சீமானுக்குதான் பிரச்னையா?

நாதக என்றாலே கரும்பு விவசாயி சின்னம்தான். ஆனால் இச்சின்னம் இந்திய குடியரசு கட்சியிடம் இருப்பதால், வேறு சின்னங்களில் நாதக போட்டியிட்டது. அத்துடன் அத்வாலே கட்சி TN-ல் போட்டியிடாது, அதனால் சின்னத்திற்கு பிரச்னை இருக்காது என நாதக நம்பியிருந்ததாம். ஆனால் இம்முறை TN தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் RPI போட்டியிடும் என <<19146858>>அத்வாலே அறிவித்துள்ளதால்<<>> சீமான் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.


