News November 22, 2025
சீமானின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

நெல்லை பணக்குடியில் இன்று சீமான் தலைமையில் நடக்கவிருந்த மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், போராட்டத்திற்காக பணக்குடி சென்ற நாதகவினரை தடுத்து நிறுத்தி போலீசார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே, தடையை மீறி தேனியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தியதுபோல், இன்றும் போராட்டம் நடக்கும் என நாதகவினர் கூறுகின்றனர்.
Similar News
News February 5, 2026
தொகுதி மாறும் நட்சத்திர வேட்பாளர்கள்

2026-ல் முக்கிய அரசியல் தலைவர்கள் தொகுதி மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2021-ல் திருக்கோவிலூரில் போட்டியிட்ட பொன்முடி விக்கிரவாண்டிக்கும், கோவை தெற்கில் போட்டியிட்ட வானதி கோவை வடக்கிற்கும், விழுப்புரத்தில் போட்டியிட்ட சி.வி.சண்முகம் மயிலத்திற்கும் மாற இருக்கிறார்களாம். அதேபோல், அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலை, கோவை அல்லது திருப்பூரில் ஒரு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளாராம்.
News February 5, 2026
தாயுடன் உறவில் இருந்தவரை கொன்றுவிட்டு செல்பி

தாயுடன் முறையற்ற உறவிலிருந்த நபரை கொடூரமாக கொன்ற இளைஞர், அவரது உடல் மீது கால் வைத்து செல்பி எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடகாவின் பெலகாவியை சேர்ந்த பெண் திருமணத்தை மீறிய உறவிலிருந்துள்ளார். இது அந்த பெண்ணின் மகனுக்கு தெரியவரவே சம்பந்தப்பட்ட பசப்பாவை (54) கண்டித்துள்ளார். ஆனாலும், பசப்பா உறவை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த இளைஞர், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார்.
News February 5, 2026
ராசி பலன்கள் (05.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


