News April 25, 2024

சாராயம் விற்றவர் கைது

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த சாம கவுண்டனுர் வட்டம் பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் போலிசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த சிவராஜ்(56) என்பவரை பிடித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News

News August 21, 2025

BREAKING: திருப்பத்தூர் அருகே போலி மருத்துவர் கைது

image

அம்பலூர் அடுத்த சங்கராபுரம் பகுதியில் மருத்துவ படிப்பு படிக்காமல் மருத்துவம் பார்த்து வருவதாக கோட்டாட்சியர் அஜிதா பேகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்று (ஆக.21) சங்கராபுரம் பகுதியில் கோட்டாட்சியர் சோதனை மேற்கொண்ட போது அங்கு அணுமுத்து என்பவர் வெறும் +2 மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவரை காவல்துறையினரிடம் கோட்டாச்சியர் ஒப்படைத்தார்.

News August 21, 2025

திருப்பத்தூர்: டிகிரி போதும்; ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

REPCO வங்கியில் Customer Service Associate/ Clerk வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாதம் ரூ.24,050 – ரூ.64,480 வரை வழங்கப்படும். முக்கியமாக இந்த பணிக்கு online தேர்வு மட்டுமே, நேர்முக தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த சூப்பர் வாய்ப்பை டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 21, 2025

செல்போன்களை குழந்தைகளிடம் அளிக்க வேண்டாம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பெற்றோர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. பெற்றோர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை இணைத்துவைத்துள்ள செல்போன்களை குழந்தைகளிடம் அளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனால் பணம் இழக்க நேரிடும் என்றும், அவ்வாறு பணம் இழந்தால், உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது http://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!