News November 22, 2025
இலவச லேப்டாப் மோசடி எச்சரிக்கை

தமிழ்நாடு இலவச மடிக்கணினி திட்டம் 2025′ தொடர்பான விண்ணப்ப இணைப்புகளைக் (Link) கிளிக் செய்ய வேண்டாம் என நாமக்கல் மாவட்டக் காவல்துறை இன்று (நவம்பர் 21, 2025) சைபர் கிரைம் விழிப்புணர்வு மூலம் எச்சரித்துள்ளது. இது முற்றிலும் போலியான தகவல் என்றும், இந்த இணைப்புகளைத் திறந்தால் உங்கள் மொபைல் அல்லது கணினியின் தகவல்கள் திருடப்பட்டு பண மோசடி நடக்க வாய்ப்புள்ளது என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News November 23, 2025
நாமக்கல்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News November 23, 2025
ராசிபுரத்தில் நடந்த கோர சம்பவம்!

ராசிபுரம்–அணைப்பாளையம் ரயில் பாதையில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு சிதைந்த நிலையில் நேற்று மாலை இருந்தது. முதலில் அடையாளம் தெரியாத நிலையில் இருந்தார். சேலம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தபோது, அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ஓட்டுநர் உரிமத்தின் மூலம் அவர் ராசிபுரம் வரதன் தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ் (51) என்பது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 23, 2025
நாமக்கல்லில் லாரி திருட்டு – பெரம்பலூரை சேர்ந்தவர் கைது!

நாமக்கல்லில் செந்தில்குமார் தனக்கு சொந்தமான லாரியை கணேஷ் என்பவரின் பட்டறையில் பழுது நீக்க கடந்த 12ந் தேதி விட்டுள்ளார். இதனை அடுத்து லாரியை காணவில்லை என நல்லிபாளையம் காவல் நிலையத்தில் லாரி உரிமையாளர் செந்தில்குமார் புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர் விசாரணையில் பெரம்பலூர் ஆலத்தூர் வரகுபாடியை சேர்ந்த முத்துகுமாரை கைது செய்து லாரியை மீட்டனர்.


