News November 22, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்று (நவ.22) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோ (உயிருடன்) ரூ. 98-க்கும், முட்டை கோழி விலை கிலோ ரூ. 122-க்கும் விற்பனையாகி வருகின்றது. அதே போல், முட்டை கொள்முதல் விலை ரூ.6.10- ஆக விற்பனையாகி வருகின்றது. கடந்த ஒன்றாம் தேதி ரூ.5.40- ஆக இருந்த முட்டை விலை, தற்போது வரை 70 காசுகள் உயர்ந்து ரூ.6.10- ஆக நீடித்து வருகிறது.
Similar News
News February 6, 2026
நாமக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 6, 2026
நாமக்கல்: போஸ்ட் ஆபீஸ் வேலை: தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 6, 2026
நாமக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க <
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


