News November 22, 2025

ச்சீ! கட்சி பெயரை கூட திருடி வைத்துள்ளார்கள்: துரை

image

2024-ல் கே.பி.சரவணன் என்பவர் தொடங்கிய ‘திராவிட வெற்றிக்கழகம்’ பெயரில், மல்லை சத்யாவும் புதிய கட்சியை தொடங்கியது சர்ச்சையாகியுள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு துரை வைகோ, தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை; ஆரம்பிக்கும் போதே திருட்டுப் பழக்கத்தில் ஆரம்பித்தால் கடைசி வரை திருட்டுப் பழக்கம் இருக்கத்தான் செய்யும். அப்படித்தான் கட்சி பெயரைக்கூட இன்னொரு கட்சியிடம் களவாடி வைத்துள்ளனர் என காட்டமாக விமர்சித்தார்.

Similar News

News February 12, 2026

சுவாசப் பிரச்னையா.. குணமாக்கும் கசாயம்!

image

◆தேவையான பொருள்கள்: ஆடாதோடை, தூதுவளை, துளசி, கண்டங்கத்திரி, மிளகு ◆செய்முறை: 2 கப் தண்ணீரில் ஆடாதோடை, தூதுவளை, துளசி, கண்டங்கத்திரி, மிளகு ஆகியவற்றை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கஷாயம் பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும். இதனை வாரத்துக்கு 2 முறை பருகினால் சுவாச மண்டல நோய் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.

News February 12, 2026

பாஜகவின் அடிமையா? Ex.அமைச்சரின் ஒரே வரி Reply

image

சிறுபான்மை ஓட்டு இனி திமுகவுக்கு கிடைக்காது என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். பாஜகவுக்கு அதிமுக அடிமை என்று திமுகவினர் சொல்வதற்கு பதிலளித்த அவர், நாங்கள் பாஜகவுக்கு அடிமையல்ல, நண்பர்கள் என்றார். மேலும், தமிழகத்தின் வளர்ச்சிதான் தங்களுக்கு முக்கியம் எனவும், ஆட்சிக்கு வந்ததும் தேவையான நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்று வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News February 12, 2026

படுக்கைக்கு அழைப்பு.. நடிகை எஸ்தர் நோரானா தடாலடி!

image

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் சிலரால் சினிமாவின் தரம் கெடுவதாக நடிகை எஸ்தர் நோரானா கூறியுள்ளார். இந்த தலைமுறையினர் சினிமாவில் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுப்பதாக கூறிய அவர், முன்பு அப்படி இல்லை என்றார். வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பவர்கள் தவறானவர்கள் என்றால், அதற்கு உடன்படுவோரும் தவறானவர்கள்தான் எனவும் தெரிவித்தார். இவர் தமிழில் ‘கேம் ஆப் லோன்ஸ்’ படத்தில் நடித்துள்ளார்.

error: Content is protected !!