News November 22, 2025
விருதுநகர்: பள்ளி வாசலுக்கு சென்ற பெண்ணுக்கு கத்தி குத்து

நரிக்குடி பள்ளிவாசல் அருகே வசிப்பவர் அரவிந்தன். இவரது மனைவி கெட்சியா (எ ) அஞ்சலி 22. உடல்நிலை சரியில்லாததால் நேற்று பள்ளிவாசலுக்கு மந்திரிக்க சென்றார். அங்கு அசரத்தாக அப்துல் அஜீஸ் 34, இருந்தார். மந்திரித்த போது திடீரென அஞ்சலியை கத்தியால் கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குத்தினார். அலறியபடி வெளியில் ஓடி வந்தார். அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்துல் அஜீஸை போலீசார் விசாரிகின்றனர்.
Similar News
News November 22, 2025
விருதுநகர்: பைக்கில் வைத்திருந்த ரூ.2 லட்சம் அபேஸ்

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை சேர்ந்தவர் நிதீஷ்குமார்(21). அரவ் நேற்று நவ.21 தனது நண்பரின் ரூ 2,95,000 அருப்புக்கோட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்வதற்கு பைக் டிக்கியில் பணத்தை வைத்து வங்கி முன்பு பைக்கை நிறுத்தி விட்டு ஜெராக்ஸ் எடுக்க கடைக்கு சென்று உள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது பைக்கில் இருந்த பணம் மாயமானது. இது குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
News November 22, 2025
விருதுநகர்: VOTER ID-ல் இதை மாத்தனுமா?

விருதுநகர் மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு. <
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 22, 2025
நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இலவச மாதிரி நேர்காணல் வரும் நவ.26 அன்று நடைபெற உள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு வழிகாட்டல் மையத்தில் நடைபெறும் இந்த நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.


