News April 25, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: வான் சிறப்பு
▶குறள் எண்: 12
▶குறள்: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.
▶பொருள்: உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
Similar News
News February 6, 2026
நடிகை நிவேதா கைது.. பரபரப்பு தகவல்

<<19063465>>போதைப்பொருள்<<>> பயன்படுத்தியதாக கைதாகியுள்ள நடிகை வின்சி (எ) நிவேதா குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. பட வாய்ப்பு குறைந்ததால் அவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த நடிகை அஞ்சு கிருஷ்ணாவிடம் இருந்து போதைப்பொருளை வாங்கிய நிவேதா, சினிமா வட்டாரத்தில் இருக்கும் பலருக்கும் அதனை சப்ளை செய்துள்ளார். இந்த வழக்கில் மேலும் பலர் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News February 6, 2026
குழந்தை வளர்ப்பில் இதில் மிக மிக கவனம் தேவை

➤குழந்தையின் துணிகளை வெந்நீரில் அலசி, துவையுங்கள். அலர்ஜி ஏற்படாது ➤ஜலதோஷம் பிடித்தால் பவுடர் அடிப்பதை தவிருங்கள். அலர்ஜியை ஏற்படுத்தலாம் ➤உணவில் சௌவ் சௌவ் காயை சேர்த்து கொடுத்தால் இதயத்துக்கு நல்லது ➤குழந்தைகளை மிகவும் சூடான நீரில் குளிக்கவைக்க வேண்டாம் ➤வயிற்று உப்புசம் ஏற்பட்டால் முருங்கை இலை சாறு, உப்பு, வசம்பு சேர்த்து தொப்புளை சுற்றி தடவலாம் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE.
News February 6, 2026
அதிகாரிகளின் அலட்சியத்தால் பலியான இளைஞர்!

டெல்லி ஜனக்புரியில் நீர்வாரியத்தால் தோண்டப்பட்ட ஆழமான பள்ளத்தில் இளைஞர் ஒருவர் பைக்குடன் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முறையான எச்சரிக்கை பலகைகள், தடுப்புகள் அமைக்காததே இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. மக்களிடம் வரி வசூலுக்கும் அரசாங்கம் அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கு தவறிவிட்டதாக நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


