News November 22, 2025
ரூ.15,000 பரிசு: கோவையில் VIRAL POSTER

கோவை கணபதி பகுதியை சேர்ந்த கதிர் குடும்பம் வளர்த்து வந்த வெள்ளை நிற கிராக்டேயில் “மியா” கிளி வகையைச் சேர்ந்த பறவை கடந்த அக்டோபர் 29-ல் பறந்துச் சென்றது. இதையடுத்து குடும்பத்தினர் கோவையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.15,000 பரிசு வழங்கப்படும் என்றும், அதை “மியா” அல்லது “PEEK-A-BOO” என்று அழைத்தால் வந்து விடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 17, 2026
கோவை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடன்

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.(SHARE)
News February 17, 2026
தமிழக பட்ஜெட்: கோவைக்கு அறிவித்தார் அமைச்சர்

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் முக்கிய அறிவிப்பாக கோவையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் வகையில் திறன்மிகு மையங்கள் அமைக்கப்படும். மேலும், நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றார்.
News February 17, 2026
கோவை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) விண்ணப்பிக்க <
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.


