News April 25, 2024

ஜேஇஇ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது

image

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுக்கு இருமுறை நடக்கும் இந்த தேர்வில், ஜனவரியில் 23 பேரும், ஏப்ரலில் 33 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதனால், 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் அதிகரித்துள்ளது.

Similar News

News January 29, 2026

6 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!

image

டெல்லியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவு தருவதாக ஆசைக்காட்டி சிறுமியின் மறைந்த சகோதரனின் 10, 13 மற்றும் 14 வயதுடைய மூன்று நண்பர்கள் இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 2 சிறுவர்கள் கைதான நிலையில், 3-வது சிறுவனும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைது செய்யக்கோரி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

News January 29, 2026

ஜனவரி 29: வரலாற்றில் இன்று

image

*1939- சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். *1780 – இந்தியாவின் முதல் செய்தித்தாளான ஹிக்கியின் பெங்கால் கெஜட் தொடங்கப்பட்டது. 1953- ஏர் இந்தியா தேசியமயமாக்கப்பட்டு இந்திய ஏர்லைன்ஸ் உருவானது. *1970 – இந்திய துப்பாக்கிச்சூடு வீரரான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பிறந்ததினம். *2009 – ஈழத்தமிழர்களுக்காக தனக்குத்தானே தீயிட்டு உயிர்மாய்த்த முத்துக்குமார் நினைவுதினம்.

News January 29, 2026

இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து படைத்த சாதனை!

image

இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் சில முக்கிய சாதனைகளை நியூசி., படைத்துள்ளது. அதன்படி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. டி20-யில் பலம் வாய்ந்த இந்திய அணியை அதிக முறை (5) இலக்கை எட்டவிடாமல் தடுத்து முதலிடம். மேலும் செப். 2023 முதல் 13 போட்டிகளுக்கு பிறகு நியூசி. முதல் வெற்றி பெற்றுள்ளது.

error: Content is protected !!