News November 22, 2025

தஞ்சை: பள்ளி மாணவி கர்ப்பம்; ராணுவ வீரர் கைது

image

திருவையாறு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி வயிற்று வலி காரணமாக தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மாணவி அளித்த தகவலின் பேரில், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரரான வீரமணி (65) என்வரை திருவையாறு போலீசார் கைது செய்தனர்.

Similar News

News February 11, 2026

தஞ்சை: உலோக சிலைகள் கடத்தல்-இருவர் கைது

image

தஞ்சாவூர், வளைப்பேட்டை பகுதியில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி தொன்மையான விஷ்ணு (ம) தேவி சிலைகள் இருந்துள்ளது. விசாரணையில் சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிலைகளை பறிமுதல் செய்த சிலை கடத்திய மணிகண்டன், ராமச்சந்திரன் என்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

News February 11, 2026

தஞ்சை: கும்பகோணம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

image

சோழபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான விளந்தகண்டம் ராஜாங்கநல்லூரில் கடந்த 22.09.22-ம் தேதி குடும்ப பிரச்சினையில் ஒருவர் இரும்பு பைப்பால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், குற்றவாளியான விளந்தகண்டம் ராஜாங்கம் நல்லூரைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதித்துறை உத்தரவிட்டுள்ளது.

News February 11, 2026

தஞ்சை மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கான காவலர்கள் நியமனம்

image

தஞ்சை மாவட்டத்தில் நேற்று (பிப். 10) இரவு 10 மணி முதல் இன்று (பிப். 11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் (அ) 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
ஷேர் செய்யுங்கள்…

error: Content is protected !!