News April 25, 2024

முதல்வர் பதவியை மம்தா ராஜினாமா செய்ய வேண்டும்

image

மேற்கு வங்க முதல்வர் பதவியை மம்தா ராஜினாமா செய்ய வேண்டுமென பாஜக வலியுறுத்தி உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 24,000 பேரின் பணி நியமனத்தை ஒரே உத்தரவில் அதிரடியாக ரத்து செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை வரவேற்றுள்ள பாஜக, மம்தா தலைமையிலான திரிணாமுல் அரசின் வெட்கக்கேடான ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Similar News

News November 13, 2025

திமுகவினர் உதவுவதில் என்ன தவறு? KN நேரு

image

SIR படிவங்களை, திமுகவினர் மக்களிடம் அளித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் BLO-க்கள் (Booth Level Officer) செல்வதில் என்ன தவறு என்று KN நேரு கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், திமுக ஐடி விங் பணியாளர்களும் SIR விண்ணப்பங்களை வழங்குவது என்பது, பணியில் உள்ள ஊழியர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

News November 13, 2025

இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் சண்டையிட தயார்: பாகிஸ்தான்

image

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலை படைத் தாக்குலுக்கு, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு தொடர்புள்ளதாக <<18263443>>அந்நாட்டு அரசு பேசி<<>> வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் சண்டையிட பாக் தயாராக உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். அதேபோல் சாதாரண கேஸ் வெடிப்பை, வெளிநாட்டு சதி என்பது போல் இந்தியா கூறிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News November 13, 2025

எனது இன்ஸ்பிரேஷன் அஜித்: துல்கர் சல்மான்

image

அஜித் இந்த வயதிலும் தனது பேஷனை நோக்கி பயணிப்பது தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். அஜித்தின் ரேஸிங் வீடியோக்கள் தனக்கு பெரும் உத்வேகத்தை தருவதாகவும் கூறியுள்ளார். அதேபோல் பல நாடுகளுக்கு அஜித் பைக்கிலேயே சுற்றி வந்ததை பற்றி பெருமையாக பேசிய துல்கர், அவருக்கு பிடித்ததை தயக்கம் இன்றி செய்து வருவதாகவும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!