News November 22, 2025
ஈரோடு: போலி டிஜிட்டல் திருமண அழைப்பிதழ் மோசடி!

ஈரோடு காவல்துறை சார்பாக அறிவுரை அழைப்பிதழ்களை வாட்ஸ்அப்பில் கோப்புகளாக மக்களுக்கு அனுப்புகின்றனர். இது போன்ற கோப்புகளை பதிவிறக்குவதன் மூலம் உங்கள் மொபைலில் மால்வேர் வைரஸைக் கொண்டு வருகின்றனர். பின்னர் சைபர் குற்றவாளிகள் உங்களின் அனைத்து தகவல்களையும் திருடுகின்றனர்.தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ்அப்பில் திருமண அழைப்பிதழ் வந்தால், அதை கிளிக் செய்ய வேண்டாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுரை!
Similar News
News February 8, 2026
ஈரோடு அருகே சோகம்: ஒருவர் பலி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், சீரகல்லி வனச்சரக ரங்கசாமி கோயில் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை, கரளவாடியில் உள்ள விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு காவலில் இருந்த மகேஷ் (28) என்ற இளைஞரை யானை மிதித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 8, 2026
அந்தியூர் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் மலைப்பாதை காவல் நிலையம் அருகே நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மைசூரிலிருந்து வந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அந்தியூர் செம்புளிச்சாம்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் (33) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைப் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
News February 8, 2026
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098


