News November 22, 2025

குமரி: அவசர உதவி எண்கள் அறிவித்த கலெக்டர்!

image

குமரி ஆட்சியர் நேற்று கூறியதாவது, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட கட்டுப்பாட்டுஅறையில் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அமர்த்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் தங்கள் புகார்களை தொலைபேசி எண்- 1077 மற்றும் 04652 231077 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார். SHARE

Similar News

News January 28, 2026

குமரி: ரேஷன் கடை வரிசையில் நிற்க வேண்டாம்!

image

குமரி மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News January 28, 2026

குமரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்!

image

குமரியில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News January 28, 2026

குமரி: தோட்டத்தில் ஒருவர் வெட்டிக் கொலை

image

ராஜாக்கமங்கலம் போலீஸ் சரகம், கார்த்திகை வடலி என்ற இடத்தில் குளத்தின் கரையில் உள்ள தென்னந்தோட்டத்தில் ஒருவர் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை செய்யப்பட்டவர் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது தெரியவில்லை. ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!