News November 22, 2025
தேனி: தூங்கிய பெண்ணிடம் செல்போன் பறிப்பு!

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (54). கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த லட்சுமியின் வாயை பொத்தி, அவரிடமிருந்த ரூ.10,000 மதிப்புள்ள செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News February 1, 2026
தேனி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News February 1, 2026
போடி அருகே தொடர் திருட்டு; அச்சத்தில் மக்கள்

போடி அருகே மணப்பட்டி மலை கிராமத்தில் தனியார் தோட்டத்தில் உள்ள குடியிருப்பில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த 13 தொழிலாளா்கள் தங்கி வேலை செய்து வருகின்றனா். நேற்று முன்தினம் அவர்கள் வேலைக்கு சென்ற நிலையில் அவர்கள் தங்கியிருந்த 8 வீடுகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு மொத்தம் ரூ.1,73,000 பணம் மற்றும் நகைகள் திருபட்டன. திருட்டு சம்பவம் குறித்து குரங்கணி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News February 1, 2026
தேனி அருகே ஒருவர் பலி

தேனி MGR நகரை சேர்ந்தவர் பால்கண்ணன் (61). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் கடந்த 1 ஆண்டுக்கு கீழே விழுந்ததில் அறுவை சிகிச்சை செய்து அதற்கான மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கவனக் குறைவால் மாத்திரையை மாற்றி சாப்பிட்ட அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் தேனி GH-ல் கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


