News November 22, 2025
வணிகம் 360°: US நிறுவனத்துடன் கைகோர்க்கும் TCS

*பிரபல உணவுப்பொருள் நிறுவனமான வில்மருடனான பங்குகளை அதானி குழுமம் முழுமையாக விற்றது. *நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான TCS, இந்தியா முழுவதும் AI தரவு சேமிப்பகங்களை அமைக்கும் திட்டத்தை அமெரிக்காவின், டிபிஜி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
*நாட்டில் போதிய அளவில் அன்னிய செலாவணி கையிருப்பில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Similar News
News February 15, 2026
லட்சியம் இல்லாத கோஷ்டி ஒன்று சுற்றுகிறது: உதயநிதி

யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் ஒரு கோஷ்டி சுற்றிக் கொண்டிருப்பதாக தவெகவை, DCM உதயநிதி மறைமுகமாக சாடியுள்ளார். தஞ்சையில் நடந்த இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய அவர், லட்சியம், கொள்கை, கோட்பாடு இல்லாமல் இருக்கும் அந்த கோஷ்டி, அரசியலை ஒரு பொழுதுபோக்காக நினைக்கிறது என விமர்சித்தார். மக்கள் பணி & அர்ப்பணிப்பு என்பதே அரசியல் என்பதை அவர்களுக்கு நாம் பாடம்புகட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News February 15, 2026
FLASH: விலை ₹60,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஜாக்பாட் தள்ளுபடியை டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹60,000 முதல் அதிகபட்சமாக ₹3.80 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன மாடல் கார்கள், அதன் விலை என்ன, எவ்வளவு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதை மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக ஸ்வைப் செய்து பாருங்கள். புக்கிங் செய்ய இப்போதே திட்டமிடுங்கள். SHARE
News February 15, 2026
மீண்டும் SK – கமல் கூட்டணி

அமரனை தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மீண்டும் நடிக்கவுள்ளார். கையில் வேலுடன் சிவகார்த்திகேயன் இருப்பது போன்ற போஸ்டரை வெளியிட்டு, நாளை மாலை 5.02 மணிக்கு பர்ஸ்ட் லுக் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ‘தாய் கிழவி’ பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சிவகார்த்திகேயனுக்கு 26-வது படமாகும்.


