News November 22, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 527
▶குறள்:
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
▶பொருள்: தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு.

Similar News

News February 3, 2026

தங்க நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

image

நள்ளிரவு முதல் பயண உடைமைக்களுக்கான புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, வெளிநாட்டில் ஓராண்டுக்கு மேல் தங்கியிருந்து வசித்துவிட்டு வான்வழியாகவோ அல்லது கடல் மார்க்கமாகவோ இந்தியா திரும்பும் பெண்கள் 40 கிராமும், ஆண்கள் 20 கிராமும் ஆபரண தங்கத்தை சுங்க வரியின்றி கொண்டுவர அனுமதிக்கப்படுவர். அதேபோல, ₹75,000 வரையிலான பொருள்களுக்கு சுங்க வரி கிடையாது.

News February 3, 2026

பிரபல தமிழ் பாடகியின் பரிதாப நிலை

image

‘ஈசன்’-ல் இடம்பெற்ற ஜில்லா விட்டு ஜில்லா பாடல் மூலம் பிரபலமானவர் தஞ்சை செல்வி. 2 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு முடக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சொல்லில் அடங்கா துயரங்களை சந்தித்து மீண்டு வந்திருந்தாலும், தற்போது வாய்ப்புகள் இன்றி தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். வீட்டு வாடகை கூட கட்டமுடியாமல் சிரமப்படுவதாக கூறும் அவர், சிறு கட்சேரி வாய்ப்புகள் கிடைத்தால் பிழைப்பு நடத்திக் கொள்வேன் என உதவி கேட்டுள்ளார்.

News February 3, 2026

அரசு ஊழியர்களின் சம்பளம் கட்.. ஏன் தெரியுமா?

image

உ.பி.,யில் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 68,000-க்கும் அதிகமான அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கி சொத்துகளை சேர்க்கும் ஊழியர்களை கண்டறியும் விதமாக அம்மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த செய்தியை SM-ல் பதிவிட்டு, தமிழ்நாட்டிலும் இதுபோன்று நடவடிக்கை எடுத்தால் எப்படி இருக்கும் என நெட்டிசன்கள் பதிவிடுகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து?

error: Content is protected !!