News April 25, 2024
IPL: மிக மோசமான சாதனை படைத்த மோஹித் ஷர்மா

DC அணிக்கு எதிரான 40ஆவது லீக் போட்டியில் GT அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா மிக மோசமான சாதனை படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் வரலாற்றில் எதிரணிக்கு அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த பவுலர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். DC-க்கு எதிரான இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசிய மோஹித் விக்கெட் எதுவும் எடுக்காமல் 73 ரன்களை DC அணிக்கு வழங்கியுள்ளார். அவருக்கு அடுத்ததாக RCB அணியின் பசில் தம்பி (70) உள்ளார்.
Similar News
News September 22, 2025
மதுபானம், பெட்ரோல் விலை குறைந்ததா?… CLARITY

புதிய ஜிஎஸ்டி இன்று அமலுக்கு வந்த நிலையில், பல்வேறு பொருள்களின் விலைகள் குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல், CNG ஆகியவற்றின் விலை குறையவில்லை. இதற்கு காரணம் அவை ஜிஎஸ்டி வரம்பில் இல்லை. மத்திய, மாநில அரசுகள் இதற்கு தனியே வரிவிதிக்கின்றன. மதுபானங்களின் விலைகளும் குறையவில்லை. இவை மாநில அரசின் வரிவிதிப்புக்குள் வருகின்றன. இவற்றின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
News September 22, 2025
தைராய்டு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டியவை

தைராய்டு உள்ளவர்களுக்கு உணவு கட்டுபாடு மிகவும் முக்கியம். குறிப்பாக சில உணவுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அவை என்னென்ன உணவுகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத உணவு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News September 22, 2025
GST சேமிப்பு திருவிழா தொடங்கியது: PM மோடி

இன்று முதல் GST சேமிப்பு திருவிழா தொடங்கியுள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், விவசாயிகள், பெண்கள், சிறு குறு நிறுவனங்கள் ஆகியவை GST சீர்திருத்தங்கள் மூலம் சேமிப்பை அதிகரிக்க முடியும் என்று கூறியுள்ளார். உள்நாட்டு பொருள்களை வாங்க வேண்டும் என்ற மோடி, தொழில், உற்பத்தி, முதலீட்டு சூழலை மேம்படுத்த மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.