News April 25, 2024
பிரதமர் மோடிக்கு சிக்கல்?

ராஜஸ்தானில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சொத்துகள் மறுபங்கீடு செய்யப்பட்டு இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் என பேசியது சர்ச்சையானது. பிரதமரின் வெறுப்புப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் பலர் புகாரும் அளித்தனர். இந்நிலையில், இந்தப் புகார் மனுக்கள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News September 23, 2025
திமுகவின் சமூகநீதி துரோகம் தொடர்கிறது: அன்புமணி

கர்நாடகத்தில் 2-வது முறையாக நடைபெறும் சாதிவாரி கணக்கெடுப்பை குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் மட்டும் சமூகநீதிக்கு எதிரான திமுகவின் துரோகம் தொடர்வதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். DMK அரசின் துரோகத்தை மக்கள் இனியும் மன்னிக்க தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் தடையில்லை என கூறிய அவர் ஆட்சியாளர்களின் சமூக அநீதி மனநிலை மட்டுமே தடையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News September 23, 2025
இந்தியா – மொராக்கோ இடையே புதிய ஒப்பந்தங்கள்

2 நாள் அரசு முறை பயணமாக, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மொராக்கோவிற்கு சென்றுள்ளார். அங்கு, பயங்கரவாத எதிர்ப்பு, கடற்சார் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, ராணுவ மருத்துவம், பயிற்சி மற்றும் தொழில்துறை கூட்டாண்மை ஆகிய துறைகளில், இரு நாட்டு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த நிகழ்வில், ராஜ்நாத் சிங் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சரும் கையெழுத்திட்டனர்.
News September 23, 2025
கல்வி நிதி: மத்திய அரசுக்கு அன்பில் மகேஸ் வேண்டுகோள்

மாணவர்கள் நலன் சார்ந்த கல்வி நிதியில் அரசியல் செய்யாதீர்கள் என மத்திய அரசை அன்பில் மகேஸ் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக கல்வி நிதியை தராமல் மத்திய அரசு முரண்டு பிடிப்பதாக அவர் சாடியுள்ளார். இந்தி, சமஸ்கிருதத்தை தமிழக அரசு ஏற்காது என குறிப்பிட்ட அவர், மத்திய பாஜக அரசு வலுக்கட்டாயமாக மும்மொழிக் கொள்கையை ஏற்கச் சொல்வது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார்.