News November 22, 2025
PM மோடி மீனவர்களை சந்திக்கவில்லை: CM ஸ்டாலின்

ராமேஸ்வரம் வரை வந்தும் தங்களை PM மோடி சந்திக்கவில்லை என்று மீனவர்கள் வருந்தியதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால், தான் கடலோர மாவட்டங்களுக்கு எப்போது வந்தாலும் மீனவர்களை சந்திப்பேன் என்றும் CM குறிப்பிட்டுள்ளார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சந்திக்கும் இன்னல்களை தவிர்க்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 24, 2025
செங்கல்பட்டு: கிரேன் மோதி காவலாளி பலி

கூடுவாஞ்சேரி பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் காவலாளியாக பணிபுரிந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாசி (45), பணியில் இருந்தபோது பின்னால் இயக்கப்பட்டு வந்த கிரேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 24, 2025
BREAKING: மொத்தம் 17 மாவட்டங்களில் விடுமுறை

கனமழை எதிரொலியால் மேலும் 3 மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, <<18372068>>14 மாவட்டங்களுக்கு<<>> விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக மதுரை, அரியலூர், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளனர். இன்னும் சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News November 24, 2025
திமுகவுக்கு, தவெக என்றாலே ஒரு உறுத்தல்: டிடிவி தினகரன்

திமுகவுக்கு தவெக என்றாலே உறுத்தலாக இருப்பது அவர்களின் பேச்சிலேயே தெரிவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். கூட்டணி பற்றி பல கட்சிகள் பேசுவதாக கூறிய அவர், அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என மீண்டும் உறுதியாக கூறியுள்ளார். சமீபகாலமாக இவர் விஜய்க்கு ஆதரவான கருத்துகளை பேசி வருவதால், அமமுக தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.


