News November 21, 2025
தேஜஸ் விபத்து சதியாக இருந்தால்… யாருக்கு லாபம்?

<<18350384>>தேஜஸ் விமான விபத்து<<>> சதியாக இருந்தால், அதற்கு இவை பின்னணி காரணங்களாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்: *சில நாடுகளின் போர் விமான பிசினஸ் பாதிக்கப்படும் *அவர்களுக்கு பிடிக்காத நாடுகள் தேஜஸை வாங்குவதை விரும்பவில்லை *இந்தியாவின் தன்னம்பிக்கையை உடைப்பது *உள்நாட்டில் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி குழப்பம் விளைவிப்பது *இந்தியாவின் ஆயுதங்கள், பாதுகாப்புத் துறை மீதான நம்பிக்கையை உடைப்பது.
Similar News
News November 24, 2025
BREAKING: 22 மாவட்டங்களுக்கு வந்தது அலர்ட்

அடுத்த 2 மணி நேரத்திற்கு ( 10 மணி வரை) 22 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், நெல்லையில் கனமழையும், கோவை, கள்ளக்குறிச்சி, குமரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகரில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
காங்., படுதோல்விக்கு இதுவே காரணம்: அண்ணாமலை

குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை, இந்தியா முழுதும் உள்ள அனைத்து மக்களிடமும் இருக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார். இதே மனநிலைதான் பிஹாரில் இருந்ததாகவும், அதனால்தான் NDA கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிஹாரில் காங்கிரஸுக்கு எப்படி படுதோல்வி ஏற்பட்டதோ, அதே நிலைதான் தமிழகத்திலும் நடக்கும் எனவும் உறுதியாக கூறியுள்ளார்.
News November 24, 2025
ஷுப்மன் கில் எப்போது அணிக்கு திரும்புவார்?

தெ.ஆ., அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் தீவிர சிகிச்சையில் இருந்துவரும் அவர் இதுவரை எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் எப்போது அணிக்கு திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மும்பையில் பிரபல முதுகுத்தண்டுவட சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்றுவரும் அவர், 2026-ல் தான் அணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.


