News April 25, 2024

உங்கள் சொத்துகளை காங்கிரஸ் பறித்துவிடும்

image

இந்திய மக்களிடமிருந்து வாழும்போதும் சரி இறந்த பின்னரும் சரி கொள்ளையடிக்க காங்கிரஸிடம் ஒரு மந்திரமுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். சத்தீஷ்கரில் பேசிய அவர், பரம்பரை வரி விதிக்கப்போவதாக காங்கிரஸ் கூறுகிறது. பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட பரம்பரை சொத்து மீதும் வரி விதிக்கும். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், காங்கிரஸ் பறித்துவிடும் எனத் தெரிவித்தார்.

Similar News

News September 23, 2025

ஹீரோயின் அம்சம் என்னிடம் இல்லையாம்: ஸ்வாசிகா

image

மூத்த நடிகர் ஒருவர் கதாநாயகிக்கு தேவையான அம்சம் என்னிடம் இல்லை என்றும், முகப்பருக்கள் இருப்பதாகவும் கூறியதாக ஸ்வாசிகா தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இதே முகப்பருக்கள், வறண்ட சருமம், இதே மூக்குடன் தான் நடித்தேன் என்றும் கூறியுள்ளார். ‘லப்பர் பந்து’ படம் மூலம் புகழ்பெற்ற இவர், தற்போது சூர்யாவின் ‘கருப்பு’ படத்திலும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

News September 23, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 23, புரட்டாசி 7 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை:12:00 PM – 1:30 PM ▶திதி: துவிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை

News September 23, 2025

திமுகவின் சமூகநீதி துரோகம் தொடர்கிறது: அன்புமணி

image

கர்நாடகத்தில் 2-வது முறையாக நடைபெறும் சாதிவாரி கணக்கெடுப்பை குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் மட்டும் சமூகநீதிக்கு எதிரான திமுகவின் துரோகம் தொடர்வதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். DMK அரசின் துரோகத்தை மக்கள் இனியும் மன்னிக்க தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் தடையில்லை என கூறிய அவர் ஆட்சியாளர்களின் சமூக அநீதி மனநிலை மட்டுமே தடையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!