News April 25, 2024
₹66,364 கோடியை திரட்டிய மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள்

கடந்த நிதியாண்டில், 185 புதிய நிதிச் சலுகைகள் மூலம் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் ₹66,364 கோடி திரட்டியுள்ளதாக பங்கு தரகு நிறுவனமான ‘பையர்ஸ்’ தெரிவித்துள்ளது. அதன் ஆய்வறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சி குறித்த கருத்துகள் வேகமாக பரவி வரும் நிலையில், முதலீட்டு வாய்ப்புகள் விரிவடைந்து வருகின்றன. இதனை, மூலதனச் சந்தையில் வளர்ச்சியை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் வாய்ப்பாக கருதுவதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News September 23, 2025
இ – சிகரெட்டால் ரன்பீர் கபூருக்கு சட்ட சிக்கல்

ஆர்யன் கான் இயக்கிய வெப் சிரீஸ் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியானது. இதில் கேமியோவாக ரன்பீர் கபூர் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இதில் இ-சிகரெட்டை புகைப்பது போன்ற காட்சியில் ரன்பீர் நடித்தது இப்போது பிரச்னையாகியுள்ளது. தடை செய்யப்பட்ட இ-சிகரெட் சினிமாவில் பயன்படுத்தியதால், ரன்பீர் கபூர் மீதும், ஒளிபரப்பிய நெட்பிளிக்ஸ் மீதும் மனித உரிமையை ஆணையம் FIR பதிய கோரி போலீஸை வலியுறுத்தியுள்ளது.
News September 23, 2025
கருண் நாயருக்கு பதில் தேவ்தத் படிக்கல்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் அணியை, BCCI நாளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இங்கிலாந்து தொடரில் சொதப்பிய கருண் நாயர் நீக்கப்படுவார் என கூறப்படுகிறது. அவருக்கு பதில் மீண்டும் தேவ்தத் படிக்கல் இடம் பிடிப்பார் என தெரிகிறது. காயம் காரணமாக ரிஷப் பண்ட் விலகியுள்ளதால் துருவ் ஜூரேல் லெவனில் இடம் பிடிப்பார். மற்றொரு விக்கெட் கீப்பராக ஜெகதீஸ்சன் இணைய, வேறு மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை.
News September 23, 2025
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது பிரான்ஸ்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில், பாலஸ்தீனத்தை தனி நாடாக, <<17788776>>பல்வேறு நாடுகள்<<>> அங்கீகரித்து வருகின்றன. அந்த வரிசையில் இப்போது பிரான்ஸும் இணைந்துள்ளது. ஐநா பொதுச்சபையில் இதை அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அறிவித்தார். இந்தியா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 140க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.