News November 21, 2025

ஔவையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

image

சமூக நலன் மகளிர் உரிமை துறையின் கீழ் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தமைக்கு 2026 ஆண்டில் சர்வதேச மகளிர் தின விழாவில் அவ்வையார் விருது வழங்கிட பல்வேறு துறைகளில் சேவையாற்றிய திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் awards.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 24, 2025

திருவாரூர்: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 24, 2025

திருவாரூர்: லாரி மீது பேருந்து மோதி விபத்து

image

மன்னார்குடியில் இன்று காலை மகா மாரியம்மன் கோயில் அருகே புதுக்கோட்டையில் இருந்து, ஜல்லி கற்களை ஏற்றி சென்ற டிப்பர் லாரி மீது பின்னால் சென்ற மினி பேருந்து லாரி மீது மோதியது. பஸ்ஸில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

News November 24, 2025

திருவாரூர்: மழையால் இடிந்து விழுந்த வீட்டின் சுவர்

image

முத்துப்பேட்டை, தர்காஸ் கிராம விவசாய கூலித்தொழிலாளி செல்லதுரை (60) என்பவரது கூரை வீட்டு சுவர், இன்று கனமழையால் இடிந்து வெளிப்புறம் விழுந்தது. இதனால் வீட்டில் இருந்த செல்லத்துரை, அவரது மாற்றுத்திறனாளி மகள், மனைவி மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தநிலையில் பாதிப்பு ஏற்பட்ட இந்த குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும், இலவச வீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!