News April 25, 2024
பாஜக சிறுபான்மை அணித் தலைவர் நீக்கம்

ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் இஸ்லாமியர்கள் குறித்த பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த ஜெய்ப்பூர் பாஜக சிறுபான்மை அணித் தலைவர் உஸ்மான் கனி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் 3-4 இடங்களை பாஜக இழக்க உள்ளதாகவும், வாக்குச் சேகரிக்கும் போது மக்கள் அவரது பேச்சு குறித்து கேள்வி எழுப்புவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
Similar News
News September 23, 2025
MP சுதா மூர்த்தியை மிரட்டிய சைபர் மோசடி கும்பல்

இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவியும், MP-யுமான சுதா மூர்த்தியை மோசடி கும்பல் மிரட்டியுள்ளது. கடந்த 5-ம் தேதி தொலைத்தொடர்புத்துறை அதிகாரி என்ற பெயரில் ஒரு நபர் சுதாவை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது சுதா மூர்த்தியின் செல்போன் எண்ணில் இருந்து தவறான வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளதாக கூறி அவரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து சுதா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News September 23, 2025
குடலை குளுகுளுப்பாக வைத்திருக்க இது போதும்!

குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க பலருக்கும் ஆசை, ஆனால் துரித உணவுகளால் அதை பாழாக்கி வருகின்றனர். குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகளை தினந்தோறும் எடுத்துக்கொள்வது கட்டாயம். அந்த உணவு எது? அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை மேலே SWIPE செய்து பாருங்கள்…
News September 23, 2025
இருமொழிக் கொள்ளையில் சாதித்த தமிழகம்: அன்பில்

தமிழக அரசு மும்மொழிக் கொள்கையில் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததற்கு, அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக இருக்க இருமொழிக் கொள்கைதான் காரணம் என அவர் விளக்கியுள்ளார். மேலும் இந்த இருமொழிக் கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர் எனவும் அன்பில் மகேஸ் குறிப்பிட்டுள்ளார்.