News November 21, 2025
ஆடம்பர பைக்குகளின் விலை சரசரவென குறைந்தது

ஸ்போர்ட்ஸ் மற்றும் அட்வென்ச்சர் பைக் பிரியர்களுக்காக சூப்பர் ஆஃபர் அறிவிக்கபட்டுள்ளது. கவாஸாகி, தனது சில மாடல் பைக்குகளுக்கு வவுச்சர் அடிப்படையிலான கேஷ்பேக் ஆஃபர்கள் மூலம் ₹55,000 வரை சலுகைகளை வழங்குகிறது. எந்த மாடல் பைக்குக்கு, எவ்வளவு சலுகை என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த சலுகை, நவம்பர் 30 வரை மட்டுமே. SHARE
Similar News
News November 27, 2025
நாளை பள்ளிகள் விடுமுறையா? CM ஸ்டாலின் ஆலோசனை

வங்கக்கடலில் 3 மணி நேரத்தில் ‘டிட்வா’ புயல் உருவாகவுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இந்த புயல் வட தமிழகத்தை நோக்கி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து CM ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்பது; மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது; உதவி மையங்கள் அமைப்பது; அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் விடுமுறை அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
News November 27, 2025
டி.கே.சிவக்குமாரை CM ஆக்க காங்., சத்தியம் செய்ததா?

யாராக இருந்தாலும் சரி கொடுத்த வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என டி.கே.சிவக்குமார் பதிவிட்டுள்ளார். 2023-ல் கர்நாடக பவர் ஷேரிங் குறித்து ஒரு ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் முதல் 2.5 ஆண்டுகள் சித்தராமையாவும் அடுத்த 2.5 ஆண்டுகள் DKS-ம் CM-ஆக செயல்படுவர் என காங்., மேலிடம் வாக்குகொடுத்ததாம். இந்நிலையில், இந்த சத்தியத்தை நினைவுப்படுத்தவே அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
News November 27, 2025
நடிகை அம்பிகா வீட்டில் சோகம்.. கண்ணீர் அஞ்சலி

பிரபல நடிகைகள் அம்பிகா மற்றும் ராதாவின் தாயார் சரசம்மா நாயர்(87) காலமானார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவரின் இறுதிச்சடங்கு திருவனந்தபுரம் அருகே உள்ள அவர்களது சொந்த ஊரான கல்லாராவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலில் அதீத ஆர்வம் கொண்டிருந்த சரசம்மா, 2014-ம் ஆண்டு வரை கேரளா மகிளா காங்கிரஸின் தலைவராக இருந்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP


