News November 21, 2025
இறுதி பணி நாள்: CJI கவாய் உருக்கம்!

CJI <<18345604>>BR கவாயின்<<>> இறுதி பணி நாள் இன்று. இந்நிலையில், டாக்டர் அம்பேத்கர் வழியில், அடிப்படை உரிமைகளை, அரசின் கொள்கைகளுடன் சமநிலைப்படுத்துவதன் மூலம் நீதியை நிலை நாட்ட முடிந்தவரை முயற்சித்ததாக கூறியுள்ளார். எளிமையாக தீர்ப்புகள் எழுதுவதில் நம்பிக்கை கொண்டுள்ளதாக கூறிய அவர், 1985-ல் சட்டம் படிக்க ஒரு மாணவனாக சேர்ந்த தான், இன்று நீதித்துறை மாணவனாகவே விலகுவதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Similar News
News November 23, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.23) நாமக்கல்-(பாலசந்தர் – 9498169138), வேலூர் – (ரவி – 9498168482), ராசிபுரம் – (சின்னப்பன் – 9498169092), பள்ளிபாளையம் – (டேவிட் பாலு – 9486540373) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News November 23, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

புயல் அலர்ட்டால், தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், முதல்கட்டமாக தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை(நவ.24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன. தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. SHARE IT.
News November 23, 2025
தலைக்கு குளிச்சதும் டவல் கட்டுறீங்களா? NOTE THIS!

தலைக்கு குளித்த பின் டவலால் முடியை கட்டுவது பெண்கள் வழக்கமாக செய்யும் ஒன்றுதான். ஆனால் டவலை இறுக்கமாக கட்டினால் முடி உடைவது, உதிர்வது போன்ற பிரச்னைகள் வரலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். எனவே, ஈரத்தலையை டவலை வைத்து மென்மையாக துடையுங்கள். வேண்டுமென்றால் Cool Mode-ல் டிரையரை யூஸ் பண்ணலாம். உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு இதை SHARE பண்ணுங்க.


