News April 25, 2024
புதுச்சேரியில் நீட் மாதிரி நுழைவு தேர்வு

புதுச்சேரியில் தினமலர் நாளிதழ், ஸ்பெக்ட்ரா நிறுவனத்துடன் இணைந்து, நீட் மாதிரி தேர்வினை நடத்த உள்ளது. இந்த தேர்வு ஏப்.28 ஆம் தேதி காலை 10: 00 மணி முதல் மதியம் 1: 20 மணி வரை, புதுச்சேரி புது பஸ்ஸ்டாண்ட் மங்கலட்சுமி பின்புறம் உள்ள ஆல்பா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் பிரமாண்டமாக நடத்த உள்ளது. தினமலர் மாதிரி நீட் நுழைவு தேர்வில் பங்கேற்க 78714 79674 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் முன்பதிவு செய்யவும்.
Similar News
News March 22, 2026
காரைக்கால்: 5 தொகுதிகளுக்கு தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, 1.நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதியில் காமராஜ், 2.காரை வடக்கு தொகுதியில் வெங்கடேஷ், 3.காரை தெற்கு தொகுதியில் அசனா, 4.நிரவி திருப்பட்டினம் தொகுதியில் வழக்கறிஞர் கணேஷ், 5.திருநள்ளார் தொகுதியில் ராஜா முகமது ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
News March 22, 2026
புதுச்சேரி: Whatsapp-ல் இலவச சட்ட உதவி!

புதுச்சேரி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. மத்திய அரசின் 72177 11814 என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க!
News March 22, 2026
காங்கிரஸ் கட்சியிலிருந்து மோகன்தாஸ் விலகல்

ஏம்பலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மாநில செயலாளர் மோகன்தாஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அத்தொகுதியில் முன்னாள் அமைச்சர் கந்தசாமிக்கு கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு, அவர் வேட்புமனு தாக்கல் செய்தது மோகன்தாஸின் அதிருப்திக்கு காரணம் என அரசியல் வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


