News April 25, 2024

பும்ராவின் வெற்றிக்கு இதுதான் காரணம்

image

டி20 கிரிக்கெட்டில் மலிங்கா, பும்ரா போன்ற பவுலர்களின் வெற்றிக்கு காரணமே அவர்களது யார்க்கர் பந்து வீச்சு திறமை தான் என்று CSK அணியின் பயிற்சியாளர் பிராவோ கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், யார்க்கர் வீச முடியும் என்று தெரிந்தும் தங்களது திறமையை டி20 பவுலர்கள் நம்புவது கிடையாது. அதுதான் அவர்கள் சிரமப்படுவதற்கு முக்கிய காரணம். பவுலர்களுக்கு யார்க்கர் பந்துகளை வீச பயிற்சி அளிக்க வேண்டும் என்றார்.

Similar News

News January 30, 2026

காங்கிரஸிடம் திமுக கெஞ்சுகிறது: EPS

image

ராகுல் காந்தி, கனிமொழியின் சந்திப்பை குறிப்பிட்டு திமுக கூட்டணியை EPS விமர்சித்தார். டெல்லியின் அடிமை அதிமுக அல்ல, திமுகதான் என்றும், இன்று காங்கிரஸிடம் கெஞ்சும் நிலைமைக்கு திமுக வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு திமுக செல்லும் நிலையை காங்கிரஸ் உருவாக்கியுள்ளதாகவும், அந்த கூட்டணி இருக்குமா இல்லையா என்ற தடுமாற்றம் வந்துவிட்டதாகவும் சாடியுள்ளார்.

News January 30, 2026

திருப்பதியில் முத்தம்.. மன்னிப்பு கேட்ட தம்பதி

image

திருப்பதியில் <<18991211>>போட்டோஷூட் <<>>எடுத்தபோது, முத்தமிட்ட திருவண்ணாமலையை சேர்ந்த திருமால், காயத்ரி தம்பதி தற்போது மன்னிப்பு கேட்டுள்ளனர். திருப்பதியில் போட்டோ, வீடியோ எடுப்பது தவறு என்று தெரியாது எனவும் அந்த போட்டோ & வீடியோக்களை டெலிட் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அனைத்து பக்தர்களிடமும் மன்னிப்பு கேட்பதாக கூறிய அவர்கள், பரிகாரமாக திருப்பதியில் சேவை செய்ய தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

News January 30, 2026

தமிழக வாக்காளர் பட்டியல்: அவகாசம் நீட்டிப்பு

image

2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் SIR பணிகள் முடிக்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய இன்றுவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், SC உத்தரவின்பேரில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பிப்.9 வரை அவகாசத்தை நீட்டித்து ECI அறிவித்துள்ளது.

error: Content is protected !!