News November 21, 2025
தஞ்சை: சிறப்பு SIR முகாம்-ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி 2026 தொடர்பாக வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்யவும், சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் நாளை (நவ.22) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே இதனை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
திருச்சிற்றம்பலம் அருகே குட்கா கடத்தியவர் கைது

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள கோரவயல்காடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றவரை போலீசார் சோதனை செய்ததில், அவரிடம் மூட்டையில் தடை செய்யப்பட்ட சுமார் 39 கிலோ எடையுள்ள குட்கா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட சித்துக்காடு அரண்மனைத் தோப்பு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்.
News November 27, 2025
தஞ்சை: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், தஞ்சாவூர் மாவட்ட மக்கள் 04362-227100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 27, 2025
BREAKING: தஞ்சை மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்!

இலங்கை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நவ.28 (நாளை) மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. SHARE NOW!


