News April 25, 2024
சின்னம் ஒதுக்கீட்டில் நீடிக்கும் குளறுபடி

மகாராஷ்டிராவில் சரத்பவார் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருப்பது போன்ற சின்னங்களை சுயேச்சைகளுக்கு தேர்தல் ஆணையம் (EC) ஒதுக்கியதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ‘ஆண் எக்காளம் ஊதும்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போன்ற ‘ட்ரம்ப்பெட்’ சின்னத்தை சரத் பவார் அணியினர் போட்டியிடும் பாராமதி, சதாரா & மாதா தொகுதிகளில் சுயேச்சைகளுக்கு EC ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News November 13, 2025
அண்ணாமலை போல் நயினாருக்கும்.. சேகர்பாபு

தனது பதவிக்காலம் முடிய 2.5 ஆண்டுகள் இருக்கிறது, ஆனால் அவருக்கு (சேகர்பாபு) 2 மாதங்களே உள்ளதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்திருந்தார். இந்நிலையில், 2024 லோக்சபா தேர்தல் முடிந்ததும், அண்ணாமலைக்கு எப்படி பாஜகவினர் அரோகரா போட்டார்களோ, அதேபோல், 2026 தேர்தல் முடிந்ததும் நயினாரின் பதவியை பறிக்க டெல்லி பேக் செய்யும் என்று சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
News November 13, 2025
சாப்பிட்டு முடிச்சதும் இத கண்டிப்பா குடிங்க!

சாப்பிட்டு முடித்ததும் வெறும் தண்ணீரை குடிப்பதை விட, சீரகம் போட்டு கொதிக்க வைத்த நீரை குடித்தால் உடலுக்கு ஆரோக்கியம் என டாக்டர்கள் கூறுகின்றனர். காரணம் *சீரக நீர் ஜீரணத்தை தூண்டுகிறது *வாயு தொல்லை, வயிறு உப்புசத்தை குறைக்கும் *சாப்பிட்ட பின் சீரக நீர் குடிப்பதை தொடர்ந்து செய்து வந்தால் ரத்த அழுத்தம் சீராகும் *உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும் *வாயை புத்துணர்ச்சியோடு வைத்து கொள்ள உதவுகிறது.
News November 13, 2025
விஜய் அண்ணா என்னை மன்னித்து விடுங்கள்

விஜய் அண்ணா என்னை மன்னித்துவிடுங்கள் என்று வீரலட்சுமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். உங்களை (விஜய்) அரசியல், கருத்தியல் ரீதியாக விமர்சனம் செய்வதில் தவறில்லை. ஆனால், அந்த விமர்சனத்தில் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஒருமையில் பேசியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்களின் ரசிகை ஒருவர் எனது கண்முன்னே இறந்ததை பார்த்த ஆத்திரத்தில் அவ்வாறு பேசினேன் என விளக்கமளித்துள்ளார்.


