News November 21, 2025
புதுவை: நிவாரணம் பெறுபவர்கள் பட்டியலில் வெளியீடு!

புதுவை மாநிலத்தில் இயற்கை பேரிடர் மற்றும் மீன் பிடி தடை காலத்தில் அரசு நிவாரணம் வழங்கப்படும். நிவாரண தொகை பெறும் தகுதியான மீனவர்களின் முதல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதுவை 18, காரைக்கால் 5, மாகே 3, ஏனாம் 51 பேர் போலி ஆதார், போலி பதிவு போன்ற காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான தகவல் மீன்வளத்துறை இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News December 24, 2025
புதுச்சேரி: 3 பெண்கள் மருத்துவமனையில் சேர்ப்பு

புதுச்சேரி நகராட்சியில் பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு, அரசு வேலை வழங்கக் கோரி உள்ளாட்சி துறை அலுவலகம் முன்பு, நகராட்சி ஊழியர்கள் மற்றும் வாரிசுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காததால் போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. நீண்ட நேரமாக உணவு உட்கொள்ளாமல் இருந்ததால் மூன்று பெண்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
News December 24, 2025
புதுச்சேரி: பணி ஆணை வழங்கும் விழா

புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில், மின் துறைக்கு புதிதாக நேர்மையான முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ள மின்துறை கட்டுமான உதவியாளர்களுக்கான, (Construction Helper) பணிக்கான பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் Lt.Governor புதுச்சேரி, முதலமைச்சர் ந.ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர்ஏம்பலம் செல்வம் மணவெளி மற்றும் முத்தம்மா IAS கலந்து கொண்டு பணி ஆணை வழங்கினார்கள்.
News December 24, 2025
புதுச்சேரி: முன்னாள் IFS அதிகாரி ஓசூரில் கைது

புதுச்சேரி போலி மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான வழக்கில், முன்னாள் (IFS) அதிகாரி சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையின் பேரில், ஓசூர் அருகே பதுங்கி இருந்த சத்தியமூர்த்தியை, நேற்று (டிச.23) கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலிசார் விசாரணைக்கு உட்படுத்திய நிலையில் வழக்கில், மேலும் சிலர் தொடர்புடையிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


